டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியு-றுத்தி, நாமக்கல்லில் நேற்று கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். டாஸ்மாக் நிறுவனத்தில், 22 ஆண்டுக-ளாக, 12,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி-யாற்றி வரும் டாஸ்மாக் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கலை சரி செய்த பின், டாஸ்மாக் தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல், மாற்று வழியில் வேறு தனியார் நிறுவனம் மூலம் நடை-முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.