உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

நாமக்கல்:நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி, உயிரி தொழில் நுட்பவியல், உயிரி மருத்துவ பொறியியல் துறைகள் இணைந்து, ஏ.ஜ.சி.டி.இ.,-யின், ஏ.டி.ஏ.எல்., திட்டத்தின் கீழ், ஏ.ஐ., சார்ந்த உயிரி தொழில்நுட்ப தரவுகளிலிருந்து, மருந்து கண்டுபிடிப்பு வரை உயிரி தொழில் நுட்பத்தால் இயக்கப்படும் தரவுகளிலிருந்து மருந்து கண்டறிதல் வரை என்ற தலைப்பில், ஒரு வார நேரடி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பாபு தலைமை வகித்தார். செயலாளர் கவித்ரா நந்தினி, செயல் இயக்குனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ராமபாலன், உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதன் அவசியத்தையும், ஆசிரியர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.இப்பயிற்சியில், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று, உயிரி தொழில்நுட்ப பயன்பாடுகள், உயிரி தகவலியல் கணினி வழி மருந்து கண்டுபிடிப்பு மூலக்கூறு மாதிரியாக்கம் மற்றும் நவீன ஆராய்ச்சி முறைகள் குறித்து விளக்கினர். ஒருங்கிணைப்பாளராக, உயிரி தொழில் நுட்பவியல் துறை தலைவர் தேன்மொழி, இணை ஒருங்கிணைப்பாளராக உதவி பேராசிரியர் செல்வி நந்தினி தேவி செயல்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி