உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்-திற்கு, மாவட்ட மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பொது-மக்களின் மனுக்களுக்கு விரைவாக தீர்வு, பதில் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிர-மைப்புகளை அகற்றி துார்வார வேண்டும்.ராசிபுரம் ஏரி, குமாரபாளையம் நீர்வழிப்பாதை மற்றும் வீசானம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்க மாநில தலைவர் பத்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி