குறிக்கார கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா கோலாகலம்
மோகனுார்: மோகனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட சுப்ரமணியபுரத்தில், குறிக்கார கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 29ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று காவிரி ஆற்-றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, வேல் எடுத்-துக்கொண்டு ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இரண்டாம் நாள், காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி குதிரைகள், பசுக்கள் உடன், குதிரை பூட்டிய சாரட் வண்டியில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து வந்து, மூலவ-ருக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மூன்றாம் நாளான, நேற்று முன்தினம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, கிடாவெட்டு நிகழ்ச்சி நடந்தது. கடைசி நாளான, நேற்று, மாலை, 3:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.