மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
21-Oct-2024
ப.பாளையம் அரசு மருத்துவமனையைதரம் உயர்த்த மா.கம்யூ., வலியுறுத்தல்பள்ளிப்பாளையம், அக். 24-பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய, மா.கம்யூ., கட்சியின், 8வது மாநாடு, நேற்று கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் தலைமையில் நடந்தது. இதில், பள்ளிப்பாளையம் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அடிக்கடி மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாலை, விசைத்தறி, சாயத்தொழில், கார்மென்ட்ஸ் உள்ளிட்ட சிறு, குறு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன், மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், பெருமாள், ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
21-Oct-2024