உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி லிப்ட் கேட்டு சென்றவர் பலி

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி லிப்ட் கேட்டு சென்றவர் பலி

நாமகிரிப்பேட்டை, நவ. 19-ராசிபுரம் அருகே, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 'லிப்ட்' கேட்டு சென்ற தொழிலாளி உயிரிழந்தார்.ராசிபுரம் அருகே, நாமகிரிப்பேட்டை அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 53; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மதியம், 1:00 மணிக்கு, ராசிபுரத்தில் இருந்து நாமகிரிப்பேட்டைக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, ராசிபுரம் முள்ளுவாடி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குணசேகரன், 30, என்பவர், 'ஆர்.ஒன்.பைவ்' டூவீலரில் நாமகிரிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கு, வழியில் நின்றுகொண்டிருந்த செல்வம், 'லிப்ட்' கேட்டதால், அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.ராசிபுரம் அடுத்த காக்காவேரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற, 'ஹோண்டா டியோ' டூவீலரை முந்த முயற்சித்துள்ளார். அப்போது, வண்டி மீது மோதாமல் இருக்க, குணசேகரன் பிரேக் பிடித்துள்ளார். இதில், 'லிப்ட்' கேட்டு சென்ற செல்வம், தலைக்குப்புற கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த, 'ஹோண்டா டியோ'வில் சென்ற பெண், சேலம் தனியார் மருத்துவமனையிலும், குணசேகரன், ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி