உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டாக்குமென்ட் தேடும் போது கிணற்றில் விழுந்த தொழிலாளி பரிதாப பலி

டாக்குமென்ட் தேடும் போது கிணற்றில் விழுந்த தொழிலாளி பரிதாப பலி

டாக்குமென்ட் தேடும் போது கிணற்றில்விழுந்த தொழிலாளி பரிதாப பலிநாமக்கல், அக். 17-தவறி விட்ட டாக்குமென்டை தேடும் போது, கிணற்றில் தவறி விழுந்த லோடுமேன், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, கொண்டி செட்டிப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 32. முட்டை நிறுவனத்தில் லோடுமேனாக பணியாற்றி வந்தார்.அவரது மனைவி சீதா, 30. குடிபழக்கம் உள்ள மாரிமுத்து, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தனது நண்பர் ரவியுடன் சேர்ந்து, கொண்டிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிணற்று மேட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர், சான்றிதழ் உள்ளிட்ட டாக்குமென்ட் வைத்திருந்திருந்தாக தெரிகிறது. அவற்றை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு மறந்து விட்டு போன டாக்குமென்டை தேடுவதற்காக, மாரிமுத்துவும், ரவியும் வந்துள்ளனர். அப்போது, கால் தவறி மாரிமுத்து கிணற்றில் விழுந்துள்ளார். உ:டனே ரவி, ஆட்களை அழைத்து வந்துள்ளார்.அதற்குள், கிணற்று நீரில் மூழ்கி மாரிமுத்து உயிரிழந்துள்ளார். நாமக்கல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.மதியம், 12:30 மணிக்கு துவங்கி, இரண்டு மணி நேரம் தீவிர தேடலுக்கு பின், 2:30 மணிக்கு மாரிமுத்துவின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை