உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலம் பொன்காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 4ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.இறையமங்கலம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவிலில் வைத்து மேளதாளத்-துடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.உலக அமைதி தின ஊர்வலம்குமாரபாளையம்: உலக அமைதி தினம், நவ., 11ல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்-கப்படுகிறது. குமாரபாளையம் உலக சமாதான ஆலயம் சார்பில், உலக அமைதி தின விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பிருந்து துவங்கியது.பேரணியை, ஞான ஆசிரியை சாந்திஸ்ரீ துவக்கி வைத்தார். முக்-கிய வீதிகள் வழியாக சென்று, உலக சமாதான ஆலயத்தில் நிறை-வடைந்தது. உலக அமைதி வேண்டி தியானம் நடத்தப்பட்டது. இதில், வணிகர் சங்கம், அபெக்ஸ் சங்கம், விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பு, அன்னை காவேரி குடும்பம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை