உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் உண்டியலில் திருட்டு; தந்தை, மகன் சிக்கினர்

கோவில் உண்டியலில் திருட்டு; தந்தை, மகன் சிக்கினர்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், கடந்த செப்., 13ல் சனீஸ்வரன் சன்னதியில் இருந்த உண்டியல் உடைத்து காணிக்கை திருடப்பட்டிருந்து. திருச்செங்கோடு போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இருவர் திருடி செல்வது தெரிய வந்தது. இவர்களது புகைப்படங்களை, மற்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பினார். இதில், பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமிநாதன், 50, இவரது மகன் முத்துகிருஷ்ணன், 22, ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற திருச்செங்கோடு போலீசார், உண்டியலில் திருடிய தந்தை, மகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை