போலீஸ் வீட்டில் 35 பவுன் ரூ.40 ஆயிரம் திருட்டு
நாமக்கல்: நாமக்கல், திருச்சி சாலையில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகவேல், 52. இவர்நாமக்கல் மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு அலுவலகத்தில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார். இவரது மனைவி அமுதவள்ளி, அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் நேற்று காலை வழக்கம்போல், வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். மாலையில் அமுதவள்ளி வீட்டிற்கு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 35 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி, மாவட்ட குற்றவியல் ஆவணங்கள் பாதுகாப்பு டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.