உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டலில் தங்கியிருந்த தேனி வாலிபர் மர்ம சாவு

ஓட்டலில் தங்கியிருந்த தேனி வாலிபர் மர்ம சாவு

ராசிபுரம்:தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ரமணன், 24; பெற்றோர் இறந்து-விட்டனர். ரமணன், சில ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுா-ரியில் படித்துள்ளார். பின், சேலத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், தான் படித்த இன்ஜி., கல்லுாரியில் சான்றிதழ் பெறுவதற்காக, இரண்டு நாட்களுக்கு முன் ராசி-புரம் சென்றுள்ளார். அங்கு, பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இரண்டு நாட்களாக சோர்ந்து காணப்பட்ட ரமணன், நேற்று அறையில் இருந்து வெளியே வரவில்லை. ஓட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்-தபோது ரமணன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து புகார்படி, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை