உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பில்லை

மாவட்டத்தில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பில்லை

நாமக்கல், 'நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை' என, கால்நடை மருத்துவ கல்லுாரியில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லை. பகல் நேர வெப்பநிலை, 33 டிகிரி செல்ஷியஸ் மற்றும் இரவு நேரம், 24 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் நிலவியது. இன்று முதல் வரும், 5 வரை ஐந்து நாட்களுக்கு, அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 34 முதல் 35 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 24 முதல் 25 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 40 முதல் 80 சதவீதம் வரை இருக்கும்.காற்று தென் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் இருந்து, மணிக்கு, 2 கி.மீ., முதல் 6 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல், 5 வரை, ஐந்து நாட்கள் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. கடந்த வாரம், கோழி நோய் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழல் சுவாச நோய் ஆகியவற்றால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, கோழிப்பண்ணையாளர்கள் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை