உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருக்குறள் பயிற்சி: மாணவர்கள் ஆர்வம்

திருக்குறள் பயிற்சி: மாணவர்கள் ஆர்வம்

ராசிபுரம்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழ்நாடு திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்-தப்படுகிறது. இதன் கீழ், ராசிபுரம் தமிழ் கழகம் சார்பில், மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 16வது வாரமாக, நேற்று நடந்த திருக்குறள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களை தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார்.ராசிபுரம் தமிழ் கழக செயலாளரும், பள்ளி துணை ஆய்வாளருமான பெரியசாமி தலைமை வகித்து பேசுகையில், ''அறிவாலும், ஒழுக்கத்-தாலும், வயதாலும் மூத்த பெரியோரின் தொடர்பை துணையாக கொள்ளல் நன்று. இது நாடாளுவோருக்கு இன்றியமையாத குணம்; மற்-றவர்களுக்கு இது பொருந்தும். பெரியோர் காட்டும் பாசமும், நேசமும் பெரிய வலுவை தரும்,'' என்றார். பயிற்சியில், மாணவர்கள் ஆர்-வத்துடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி