உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாட்சி சொல்ல வந்தவருக்கு கோர்ட் வளாகத்தில் மிரட்டல்

சாட்சி சொல்ல வந்தவருக்கு கோர்ட் வளாகத்தில் மிரட்டல்

குமாரபாளையம், குமாரபாளையம் நீதிமன்றத்திற்கு, நேற்று வெப்படை போலீஸ் ஸ்டேஷன் சார்பில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், 2022ல், படவீடு பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி விக்னேஸ்வரன், 26, என்பவரை கவின்குமார், 24, அரவிந்தராஜ், 27, ஹரிதாஸ், 27, ஆகிய மூவரும் அடித்து பணம் பறித்ததாக வழக்கு தொடரப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.ஹரிதாஸ் தவிர மற்ற இருவரும், ஜாமினில் வெளியே வந்தனர். கிளை சிறையில் இருந்த ஹரிதாஸ் என்பவரை, வெப்படை போலீசார் நேற்று, குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கு வழக்கு விசாரணைக்கு வந்த ஹரிதாஸ், விக்னேஸ்வரனை பார்த்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நீதிபதியிடம், விக்னேஸ்வரன் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குமாரபாளையம் போலீசாரை வரவழைத்து, ஹரிதாஸ் என்பவரை விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை