உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு சனி, ஞாயிற்று கிழமைகளில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கொல்லி ம-லையில் கடந்த மாதம் பெய்த கன மழையால், இங்குள்ள மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வனத்துறையினர் குளிக்க தடை விதித்திருந்தனர்.இந்த தடை கடந்த சில வாரங்களுக்கு முன் விலக்கப்பட்டது. தற்-போது, அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால், நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், பல்வேறு பகுதி-களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின், அரப்பளீஸ்வரர் கோவில், மாசி பெரியசாமி கோவில், எட்டிக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை