உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாசலுார் படகு இல்லத்தில் விதிகளை மீறிய இளைஞர்களால் சுற்றுலா பயணிகள் அச்சம்

வாசலுார் படகு இல்லத்தில் விதிகளை மீறிய இளைஞர்களால் சுற்றுலா பயணிகள் அச்சம்

சேந்தமங்கலம், கொல்லிமலை வாசலுார்பட்டி படகு இல்லத்தில், படகு சவாரி செய்த சில இளைஞர்கள் விதிமுறைகளை மீறியதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு முக்கிய இடமாக வாசலுார்பட்டி படகு இல்லம் உள்ளது. செம்மேட்டில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் படகு இல்லம் அமைந்துள்ளது. இதில் 5 மிதி படகுகள் உள்ளன. ஒரு படகில், 4 பயணிகள் வீதம் படகு சவாரி செய்ய அனுமதி உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஒரு படகில் 5 முதல் 6 பேர் வரை ஏறி பயணம் செய்துள்ளனர். மேலும் ஏரியின் நடுப்பகுதியில், படகு மீது ஏறி நடனம் ஆடியதோடு செல்பி எடுத்து விளையாடியபடி இருந்தனர். இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படகில், 4 பேருக்கு மேல் ஏற்றி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை