மேலும் செய்திகள்
மின்தடை ரத்து அறிவிப்பு
23-Sep-2025
ப.வேலுார், பரமத்தி வேலுாரில், நகர அனைத்து வர்த்தகர் சங்கம் சார்பில், நாளைய மின் தடையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனுார், சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக, மின் விளியோகம் நாளை (18ம் தேதி) காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நிறுத்தப்படும் என, மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுவதால், வரும் இரு தினங்களுக்கு மட்டுமே சிறு வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனை அதிகரிக்கும்.பரமத்தி வேலுார் சுற்று வட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு ஜவுளிக்கடை, சிறு வியாபாரிகள் துணிக்கடைகள், பேக்கரி மற்றும் பலகார கடைகளில் விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் நாளை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளதால், சிறு வியாபாரிகளுக்கு வர்த்தகம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, தீபாவளிக்கு முன்னதாக அறிவித்துள்ள மின்தடையை ரத்து செய்ய வேண்டும் என, வியாபாரிகள் சார்பில் ப.வேலுார், நகர அனைத்து வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
23-Sep-2025