மேலும் செய்திகள்
பார்க்கிங் வசதியில்லாத மண்டபங்களால் நெரிசல்
01-Oct-2025
நாமக்கல், 'திருமண மண்டபங்கள், விடுதி அரங்கில் நடத்தப்படும் கண்காட்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் கண்காட்சி விற்பனை என்ற பெயரில், பலர் தற்காலிக கடைகள் அமைத்து வணிகம் செய்து வருகின்றனர். இதனால் உள்ளூர் சிறு, குறு வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், 'இது போல் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி அரங்கில் கண்காட்சி விற்பனை நடத்தக்கூடாது' என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை மீறி, மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் பல மண்டபங்களில் கண்காட்சி விற்பனை நடந்து வருகிறது. மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள காலி இடங்களில், அனுமதி பெறாமல், பாதுகாப்பு வசதிகள் இன்றி திடீர் கடைகள் அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம், இது போன்று திருமண மண்டபங்களில் நடத்தப்படும் கண்காட்சி விற்பனை மற்றும் காலி இடங்களில் அமைக்கப்படும் திடீர் கடைகளுக்கு தடை விதிப்பதுடன், அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01-Oct-2025