உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதுகலை ஆசிரியர்கள் 3 பேருக்கு இடமாறுதல்

முதுகலை ஆசிரியர்கள் 3 பேருக்கு இடமாறுதல்

நாமக்கல், மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வில், முதுகலை ஆசிரியர்கள், மூன்று பேருக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது.நாமக்கல்லில் முதன்மை கல்வி அலுவலகத்தில், உபரி முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடந்தது. இதில், நாமகிரிப்பேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் மோகனப்பிரியா, நாமக்கல் மகளிர் மேல்நிலை பள்ளிக்கும், பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தாவரவியல் ஆசிரியராக பணியாற்றிய கலைச்செல்வி, பொத்தனுார் அரசு மேல்நிலை பள்ளிக்கும் மாறுதல் பெற்றனர்.அதேபோல், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் முதுகலை பொருளியல் ஆசிரியராக பணிபுரிந்த சரிதா, எருமப்பட்டி ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கும் மாறுதல் பெற்றனர். பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை