உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

நாமக்கல், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக, கடந்த, இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வந்த சுமன், தமிழ்நாடு மின்னணு நிறுவன பொதுமேலாளராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, சிப்காட் நில எடுப்பு நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு, நேற்று அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பணியை அவர் கூடுதலாக கவனிக்கிறார். தர்மபுரியை சேர்ந்த இவர், நாமக்கல் ஆர்.டி.ஓ.,வாக ஏற்கனவே பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்துறை, நில அளவைத்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை