உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரால் அவதி

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரால் அவதி

பள்ளிப்பாளையம், காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, சோழசிராமணி, மொளசி, தாஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, ஆயக்காட்டூர் உள்ளிட்ட முக்கிய பகுதிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நள்ளரவில் பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. இதனால், சுரங்க பாதையின் மையப்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, டூவீலரில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை