மரவள்ளிக்கு விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம் நடத்த வலியுறுத்தல்
நாமக்கல்: 'மரவள்ளிக்கு விலை நிர்ணயம் செய்ய சேகோ சர்வ், விவசா-யிகள், ஆலை உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை நாமக்கல்லில் கூட்ட வேண்டும்' என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசு-கையில், ''நாமக்கல் மாவட்டத்தின், ஆண்டு இயல்பு மழைய-ளவு, 716.54 மி.மீ., தற்போது வரை, 889.2 மி.மீ., மழை பெறப்-பட்டுள்ளது. டிச., முடிய இயல்பு மழையளவை விட, 172.66 மி.மீ., அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், விதைகள் மற்றும் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்-கங்கள், தனியார் நிறுவனங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:மெய்ஞானமூர்த்தி, விவசாயி: தற்போது மரவள்ளி அறுவடை சீசன் துவங்கியுள்ளது. உற்பத்தி செய்யும் விவசாயிகள் விலை நிர்-ணயம் செய்கின்றனர். ஆனால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இடையில் புரோக்-கர்கள் கூடுதல் லாபம் சம்பாதிக்கின்றனர். அதனால், சேகோ சர்வ், விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள் அடங்கிய முத்த-ரப்பு கூட்டத்தை நாமக்கல்லில் கூட்ட வேண்டும்.பாலசுப்ரமணியன், மாநில பொதுச்செயலாளர், விவசாயிகள் முன்-னேற்ற கழகம்: 2025 ஜன., 21ல், தமிழகம் முழுவதும், கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும். கேபிள் 'டிவி' மாத கட்-டணம், 165 ரூபாய். ஆனால், 200, 250 ரூபாய் என கூடுதலாக வசூல் செய்கின்றனர். அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.