உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில் ரூ.28.49 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில் ரூ.28.49 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல்: நாமக்கல், மோகனுார் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 71 டன் காய்கறி, 28.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.நாமக்கல் கோட்டை சாலை மற்றும் மோகனுாரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்-களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்-களை வாங்கி செல்வது வழக்கம்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 251 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். 55,247 கிலோ காய்கறி, 16,208 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 71,475 கிலோ எடையுள்ள விளை-பொருட்கள், விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம், 28 லட்-சத்து, 49,657 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை