மேலும் செய்திகள்
வழக்கு வாகனங்கள் மண்ணோடு மண்ணாகும் அவலம்
24-May-2025
நாமக்கல் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் ஜூன், 6ல், பொது ஏலம் விடப்படுகிறது என, நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி., தன்ராசு தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 3 நான்கு சக்கர வாகனங்கள், 4 இரண்டு சக்கர வாகனங்கள் என, மொத்தம், 7 வாகனங்கள் வரும், ஜூன், 6ல், காலை, 10:00 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை, 10:00 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.ஜூன், 5ல், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, பொது ஏலம் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன் பணமாக, 5,000 ரூபாய், ஜூன், 6ல், காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள் செலுத்த வேண்டும். முன் பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகையுடன், ஜி.எஸ்.டி., முழுவதையும் செலுத்தி, வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம்.மேலும், ஒரு நபர் முன் பணத்திற்கு, அவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். ஏலம் எடுக்காதவர்கள் செலுத்திய முன் பணம், ஏலம் முடிந்த பின்புதான் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு, 'இன்ஸ்பெக்டர், மதுவிலக்கு அமல் பிரிவு, நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு' அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
24-May-2025