உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விஜயகாந்த் பிறந்த நாள் விழா

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

குமாரபாளையம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலர் விஜய்சரவணன் தலைமை வகித்தார். நகரில் பல இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நாராயண நகர், புத்தர் தெரு ஓலப்பாளையம் பகுதியில், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரசுப்பள்ளி மாணவ, மாணவியர், 500 பேருக்கு நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இதில் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயண சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், நகர அவைத்தலைவர் ரவி, நகர மகளிரணி துணை செயலர் சத்யா, இளைஞரணி செயலர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !