உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராம உதவியாளர் தேர்வு 439 பேர் பங்கேற்பு

கிராம உதவியாளர் தேர்வு 439 பேர் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் வட்டத்தில் காலியாக உள்ள, 14 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதில், 439 தேர்வர்கள் பங்கேற்றனர். நாமக்கல்-மோகனுார் சாலையில் செயல்படும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்-வுக்கு, 523 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்-தது. ஆனால், 439 தேர்வர்கள் மட்டுமே பங்கேற்-றனர். 84 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 'தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, வரும் நாட்-களில் அடுத்தக்கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு தகு-தியான, 14 பேர் தேர்வு செய்யப்படுவர்' என, தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், கொல்-லிமலை, மோகனுார், திருச்செங்கோடு, குமார-பாளையம், ப.வேலுார் ஆகிய வட்டங்களிலும், நேற்று கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, அந்தந்த தாசில்தார்கள் மேற்பார்-வையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை