மேலும் செய்திகள்
அடிப்படை வசதி கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
06-Nov-2024
பள்ளிப்பாளையம் நகராட்சிபகுதியில் 2 நாள் குடிநீர் ரத்துபள்ளிப்பாளையம், நவ. 22-பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், 7 வார்டுகளில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, நகராட்சி கமிஷனர் தயாளன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பள்ளிப்பாளையம் நகராட்சியில், தற்போது குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. நகராட்சிக்குட்பட்ட ஜீவா ெஷட் பகுதியில் அமைந்துள்ள, குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து செல்லும், குடிநீர் பகிர்மானக் குழாய்கள் மற்றும் வால்வுகள் புதியதாக மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது.மேற்கண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் செல்லும் புதிய வார்டு எண் 6, 7, 8, 9, 10, 11, மற்றும் 21 ஆகிய பகுதிகளுக்கு, இன்றும் (22ம் தேதி) மற்றும் நாளை ( 23ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்க இயலாது. குடிநீரை, பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
06-Nov-2024