சிதிலமடைந்த முதலைப்பட்டி ரவுண்டானா விபத்து நடக்கும் முன் சீரமைக்கப்படுமா
நாமக்கல், நாமக்கல் நகரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் முதலைப்பட்டி உள்ளது. தற்போது அங்கு புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. அதனால் பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுகின்றன.அதேபோல், நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களும், புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. மேலும் திருச்சி, துறையூர், மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் மார்கமாக செல்லும் இளரகம் மற்றும் கனரக வாகனங்கள் முதலைப்பட்டி தேசியநெடுஞ்சாலையின் மேம்பாலம் வழியாகத்தான் செல்லும். அவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில் முதலைப்பட்டி பைப்பாஸ் மேம்பாலத்தின் கீழ், நாமக்கல் நகர் பகுதியில் இருந்தும், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்தும், புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் உள்ள ரவுண்டானாவின் தடுப்புச்சுவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிதிலமடைந்துள்ளது.அதில் இருந்து வெளியில் கொட்டியுள்ள ஜல்லி, மண் குவியல்களால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயநிலை உள்ளது. பெரும் விபத்து நடக்கும் முன் சிதிலமடைந்த தடுப்புச்சுவற்றை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.