பொக்லைன் மோதி பெண் உயிரிழப்பு
பொக்லைன் மோதிபெண் உயிரிழப்புநாமகிரிப்பேட்டை, அக். 22-நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வையாபுரி, 70; இவரது மனைவி சரோஜா, 64. இவர், நேற்று விவசாய நிலத்தை சமன் செய்ய பொக்லைன் இயந்திரம் ஒன்றை வரச்சொல்லியிருந்தார். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் சந்திரசேகரன், 34, பொக்லைன் இயந்திரத்தை ஓட்டி வந்தார். தொடர்ந்து, வேளாண் நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த சரோஜா மீது பொக்லைன் இயந்திரத்தின் பக்கெட் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரோஜா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆயில்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.