மேலும் செய்திகள்
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு
26-Dec-2024
ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம், குருக்குபுரம் பஞ்.,ல் எல்லப்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் இங்கு பால் ஊற்றி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் பால் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் பால் ஊற்ற சொசைட்டி நிர்வாகம் மறுத்து வருவதாக கூறி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால் சொசைட்டி முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, பால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாவது: எல்லப்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் மிக குறைந்தளவே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 100 லிட்டருக்கு குறைவாக பால் அனுப்பும் சங்கங்களை நிர்வகிக்க முடியாமல் மூடியாக வேண்டும். எல்லப்பாளையம் கூட்டுறவு சங்கத்திற்கு, தினமும், 50 லிட்டருக்கு குறைவாகவே கொள்முதல் செய்கின்றனர். அதிலும், விற்பனை போக, 20 முதல், 30 லிட்டர் தான் அனுப்பி வைக்கின்றனர். எதற்காக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பால் ஊற்றவில்லை என, தெரியவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
26-Dec-2024