உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை

வெண்ணந்துார் : வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்., 3-வது வார்டு பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, பலமுறை டவுன் பஞ்., அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், எந்த பலனும் இல்லை. ஆத்திரமடைந்த பெண்கள், காலி குடங்களுடன் டவுன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்