உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண்கள் பாதுகாப்பு சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்

பெண்கள் பாதுகாப்பு சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்

நாமக்கல், ஜன. 2-''பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து, அரசுத்துறையினர் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, கருத்தரங்கில், கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.அவர் தொடர்ந்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கிறது.இக்கருத்தரங்கமானது, மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில் உள்ள வட்டாரம், சமுதாய பயிற்றுனர்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து உதவித்திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு, வரும், 7 வரை நடக்கிறது.இந்த கருத்தரங்கை முழுமையாக பயன்படுத்தி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், 3 ஆண்டுகளில், 172 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 2024-ல், 74 ஆக குழந்தை திருமணம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை