உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலையில் ரிப்ளக்டர் பொருத்தும் பணி விறுவிறு

சாலையில் ரிப்ளக்டர் பொருத்தும் பணி விறுவிறு

ராசிபுரம்:ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரியில் இருந்து சீராப்பள்ளி வரை, 3.371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த, ஏழு மீட்டர் அகல சாலை, 10 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வெள்ளைக்கோடுகள் அமைக்கும் பணி, கடந்த வாரம் நடந்தது. சாலையோர கோடுகள், மத்திய பகுதியில் கோடுகள் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. நேற்று, ரிப்ளக்டர் பொருத்தும் பணி நடந்தது. தனியார் கல்லுாரி, நகர் பகுதிகளில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடங்களில், 'ரிப்ளக்டர்' பொருத்தும் பணி நடந்தது. இதில், மஞ்சள், வெள்ளை, சிகப்பு நிற, 'ரிப்ளக்டர்'கள் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை