உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலில் மிஷின் தவறி விழுந்து தொழிலாளி பலி

காலில் மிஷின் தவறி விழுந்து தொழிலாளி பலி

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சென்ட்ரிங் வேலையில் கம்பி அறுக்கும் போது, மிஷின் காலில் விழுந்து பலத்த அடிபட்டு தொழிலாளி பலியானார்.குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ரத்தின வேல், 65. கட்டுமான சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில், மிஷின் மூலம் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது கை தவறி மிஷின் வலது கால் தொடை மீது விழுந்து, காலை அறுத்ததால் ரத்தம் பெருமளவில் வெளியேறியது.இது குறித்து அவரது மனைவி சாந்திக்கு, 55, தகவல் தர அவர் தன் உறவினர்களுடன் நேரில் வந்து, கணவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை