உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேன் மோதியதில் தொழிலாளி பலி

வேன் மோதியதில் தொழிலாளி பலி

ப.வேலுார், டிச. 20--ஒடிசா மாநிலம் சுந்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் கட்டுவா மகன் பிரகாஷ் கட்டுவா, 22. இவர் கந்தம்பாளையம் அருகே செல்லப்பம்பாளையத்தில் காகித அட்டை தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தன் இருசக்கர வாகனத்தில் கந்தம்பாளையம் வந்தபோது, போஸ்ட் ஆபீஸ் அருகே எதிரே வந்த வேன் மோதியதில் பிரகாஷ் கட்டுவா பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரகாஷ் கட்டுவா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கந்தம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை