உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி, 61; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 4ம் தேதி, டூவீலரில் வெப்படையில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில், எலந்தகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவரது டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த மணியை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை