உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இரவு காவலாளி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

இரவு காவலாளி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல்,இரவு காவலாளி கொலை வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டிபுதுாரை சேர்ந்தவர் சுப்ரமணி, 60. இவர், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள மர அறுவை மில்லில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். 2015 ஜூன், 14ல், பணியில் இருந்தபோது, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில், மர அறுவை மில்லுக்கு சொந்தமான அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அங்குள்ள மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த, 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில், அதே மரஅறுவை மில்லில் வேலை செய்த, நாமக்கல் சிட்கோ காலனியை சேர்ந்த தங்கவேல், 51, என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார்.அதில், குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி தங்கவேலுக்கு ஆயுள் தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !