உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையால் மஞ்சள் வரத்து சரிவு

மழையால் மஞ்சள் வரத்து சரிவு

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் செவ்வாய்கிழமை தோறும் மஞ்சள் விற்பனை நடக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் மஞ்சள் சீசன் தொடங்கியது. இதனால், சில வாரங்களாக மஞ்சள் விற்பனை, ஆர்.சி.எம்.எஸ்.,சில் மட்டும், ஒரு கோடி ரூபாயை தாண்டி விற்பனையானது. சில நாட்களாக ராசிபுரம் மட்டுமின்றி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விற்பனைக்கு வரும் மஞ்சளை காயவைத்து தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏலத்திற்கு முதல் நாளில் இருந்தே வாகனங்களில் மஞ்சளை விவசாயிகள் கொண்டுவருவர். ஆனால், மழையால், நேற்று மாலை வரை மிகவும் குறைவான அளவிற்கே மஞ்சள் வரத்தானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ