உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மதுபானங்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது

மதுபானங்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது

மோகனுார், மோகனுார் அடுத்த அணியாபுரம் பகுதிகளில், மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, மோகனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., கவிப்பிரியா தலைமையிலான போலீசார், நேற்று அணியாபுரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு புதர் பகுதியில் சந்தேகப்படும் வகையில், வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன், 28, என்பது தெரியவந்தது. மேலும், அதிகாலையில், மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, குவார்ட்டர், புல், பீர் என, மொத்தம், 85 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை