உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வழிப்பறி இளைஞர் கைது

வழிப்பறி இளைஞர் கைது

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி, துத்திக்குளம், பொம்மசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரத்தில் டூவீ-லர்களில் செல்வோரை மிரட்டி செல்போன், பணத்தை மர்ம நபர்கள் பறிப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இகுறித்து, சேந்-தமங்கலம் போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவு-களை ஆய்வு செய்தனர். அதில், காளப்பநாய்க்கன்பட்டி, நஞ்சுண்-டாபுரம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த சரவணன், 21, வழிப்ப-றியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார், நான்கு மாதங்களாக தேடி வந்தனர். நேற்று, சேந்தமங்கலம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த சரவணனை பிடித்து, போலீசார் கைது செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை