மேலும் செய்திகள்
லாரி கவிழ்ந்து விபத்து
31-Jan-2026
கூடலூர் : கூடலூர் தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷன் அருகே சாலையில் மர கிளை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூரில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று பிற்பகல் பலத்த மழை பெய்தது. அப்போது, தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷன் அருகே பிற்பகல் 2.45 மணிக்கு மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், கூடலூர்,தேவர்சோலை, பிதர்காடு, பாட்டவயல் கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி, கண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே 2 மணிநேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. தகவல் அறிந்த கூடலூர் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு வந்து, மரத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
31-Jan-2026