உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜீன்பூல் தாவரமைய கண்ணாடி உடைப்பு

ஜீன்பூல் தாவரமைய கண்ணாடி உடைப்பு

கூடலூர் :கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மைய நுழைவு வாயிலிலுள்ள 'மினியேச்சர்' அறை கண்ணாடியை காட்டு யானைகள் உடைத்தது. கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், நிர்வாக பகுதி, தாவரங்கள் நடவு செய்யும் பகுதி மற்றும் யானை உள்ளிட்ட வன விலங்கு மேய்ச்சல் பகுதி என வகைப்படுத்தப்பட்டு பாராமரித்து வருகின்றனர். தாவரங்கள் நடவு செய்யும் பகுதிக்கும், நிர்வாக பகுதிக்கும் யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் சார்பில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு வரும் காட்டு யானைகள் மேய்ச்சல் நிலப் பகுதியுடன் திரும்பி சென்று விடும். நேற்று முன்தினம் உணவுக்காக மேய்ச்சல் நிலப் பகுதிக்கு வந்த 14 எண்ணிக்கை கொண்ட யானைகள், நள்ளிரவில் மின் வேலியை உடைத்து கொண்டு தாவரங்கள் நடவு பகுதிக்கு நுழைந்து. அப்பகுதியில் பயிரிட்டிருந்த பல தாவரங்களை நாசம் செய்ததுடன், நுழைவு வாயில் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள 'மினி யேச்சர்' அறையின் கண்ணாடியை உடைத்து நாசம் செய்தது. தகவல் அறிந்த வனவர் காந்தன் தலைமையில் வன ஊழியர்கள் யானைகளை மேய்ச்சல் நிலப் பகுதிக்கு விரட்டியடித்தனர். மேலும், இப்பகுதிக்கு யானைகள் வருவதை தடுக்க மின் வேலியை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ