மேலும் செய்திகள்
மலை மாவட்டத்தில் தைப்பூச திருவிழா கோலாகலம்
7 hour(s) ago
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல விழிப்புணர்வு பிரசாரம்
7 hour(s) ago
இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு பணி
7 hour(s) ago
யானை ஆக்ரோஷத்தை உணராத சுற்றுலா பயணியர்
7 hour(s) ago
குன்னூர் : அருவங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் 'மஞ்சள் மழை' பெய்வதாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு, வெலிங்டன் உட்பட பகுதிகளில் 100க்கணக்கான குடியிருப்புகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் கூரை மீதும், நீர் தேக்க தொட்டி, நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மீது மஞ்சள் நிறத்தில் ஒரு வகை திரவம் படிகிறது. சில சமயங்களில் இந்த திரவம் பொதுமக்களின் மீதும் பட்டு, அவர்களது உடையில் மஞ்சள் நிற கரை ஏற்படுகிறது. இந்த அசாதாரண சம்பவம் மக்கள் மத்தியில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்திடம் சம்மந்தப்பட்ட பகுதி மக்கள் புகார் கூற, வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு இத்தகவலை கன்டோன்மென்ட் நிர்வாகத்தினர் அனுப்பியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணைத் தலைவர் பாரதியார் கூறுகையில், ''அருவங்காடு, வெலிங்டன் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் மழை பெய்வதாக மக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்,'' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago