உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு

விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு

விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடைகாலத்தில் மாயார் ஆறு, ஒம்பட்டா, கேம்பட் உள்ளிட்ட நீராதாரங்கள் வனவிலங்குகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கடந்தாண்டு பருவ மழை பொய்த்தது. நடப்பாண்டு ஏப்., மாதம் இறுதி வரையும் கோடை மழை பெய்யவில்லை. முதுமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தாவரங்கள் கருகியும், மரங்களில் இலைகள் உதிர்ந்து வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீருக்காக இடம் பெயர்ந்துள்ளது.வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் மாயார் ஆற்றிலிருந்து வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து வந்து, தொட்டிகளில் சுழற்சி முறையில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். உணவு, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் உடல் நலம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி