உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடியில் நலத்திட்ட உதவி; மாவட்டத்தில் 13 ஆயிரம் பயனாளிகள் பயன்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடியில் நலத்திட்ட உதவி; மாவட்டத்தில் 13 ஆயிரம் பயனாளிகள் பயன்

ஊட்டி : நீலகிரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம், 10 கோடி ரூபாய் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்துறை மூலம் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.மேலும், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலைகளில் தங்களது நிலையினை உயர்த்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் பொருட்டு சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அடைவதை இலக்காக கொண்டு, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ரூ. 10 கோடியில் திட்டம்

பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவதில் மாநிலத்தில் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இட ஒதுக்கீடு கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கு அரசு மற்றும் பொது துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் ஏதுவாக சிறந்த ஒரு பங்களிப்பை இத்துறை வழங்கி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் நிலவரப்படி மாவட்ட பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த, 776 மாணவியர்களுக்கு, 4.90 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த கிராமப்புற பள்ளிகளில் பயிலும், 798 மாணவியர்களுக்கு, 4.93 லட்சம் ரூபாய்; அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு பயிலும், 5,644 மாணவர்களுக்கு , 2.78 கோடி ருபாய் செலவில் இலவச சைக்கிள்; 78 மகளிர்களுக்கு , 4.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம், 13, 946 பயனாளிகளுக்கு , 10 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை