108 ஆம்புலன்சில் பிரசவம்; தாயும்-, சேயும் நலம்
பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடியை சேர்ந்தவர் ராஜூஷா,20. கர்ப்பிணியான இவர் நேற்று காலை சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து. 108 ஆம்புலன்சில், கூடலுார் அரசு மருத்துவமனைக்கு செவிலியர் எலிசபெத் அழைத்து சென்றார்.அப்போது, பந்தலுார் அருகே நீர்மட்டம் வனப்பகுதி சாலையில் சென்றபோது, பிரசவவலி அதிகரித்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓரமாக நிறுத்தப்பட்டு செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் பைலட் கோபிநாத், உதவியாளர் கோகுல் உள்ளிட்டோர், பிரசவம் பார்த்துள்ளனர்.அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து குழந்தை மற்றும் தாய், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.