உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 14 டன் நிவாரண பொருட்கள் மூன்று லாரிகளில் பயணம்

14 டன் நிவாரண பொருட்கள் மூன்று லாரிகளில் பயணம்

கூடலுார் : கூடலுார், குன்னுார் வியாபாரி சங்கங்கள், கூடலுார் ரோட்டரி வேலி சார்பில், மூன்று லாரிகளில், 14 டன் நிவாரண பொருட்கள் வயநாடு எடுத்து செல்லப்பட்டது.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவம், மத்திய மாநில அரசு பேரிடர் மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட வயநாடு பகுதி மக்களுக்கு உதவும் வகையில், பலரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.அதன்படி, கூடலுார் மற்றும் குன்னுார் வியாபாரி சங்கங்கள், கூடலுார் ரோட்டரி வேலி சார்பில், 'பிளாஸ்டிக் வாட்டர் டாங்க், மளிகை பொருட்கள், காய்கறிகள், பாய் மட்டும் போர்வைகள்,' என, மொத்தம் 14 டன் நிவாரண பொருட்களை மூன்று லாரிகள் மூலம் வயநாடு பகுதிக்கு எடுத்து சென்றனர்.வணிகர்கள் சங்க மாநில துணைத் தலைவர் தாமஸ், கூடலுார் வியாபாரி சங்க தலைவர் ரசாக், குன்னுார் வியாபாரி சங்க செயலாளர் வினோத், கூடலுார் ரோட்டரி வேலி தலைவர் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்