மேலும் செய்திகள்
தேவாலய பணியாளர்கள் 14 பேருக்கு அடையாள அட்டை
06-Feb-2025
ஊட்டி; ஊட்டியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து, 157 மனுக்கள் பெறப்பட்டன.ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்த கூட்டத்தில், 'வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு மற்றும் சாலை வசதி,' என, பொது மக்களிடம் இருந்து, 157 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன. தொடர்ந்து, முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், 6 பயனாளிகளுக்கு, 2.05 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை சார்பில், சீர் மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 7 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக, அடையாள அட்டை வழங்கப்பட்டது. தவிர, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கேத்தி பேரூராட்சி, பிரகாசபுரம் பகுதியில், 8 பயனாளிகளுக்கு, வீடு ஒதுக்கீடு ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.இதில், கூடுதல் கலெக்டர் கவுசிக், டி.ஆர்.ஓ., நாராயணன், உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
06-Feb-2025