மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
14 hour(s) ago
குன்னுார் : தமிழக அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம், குன்னுார் ஐ.டி.ஐ.,யில் வரும், 15ம் தேதி நடக்கிறது.தேசிய தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ், அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நீலகிரி மாவட்ட அளவில் தொழிற் பழகுனர்களுக்கான, 'பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை' முகாம் நடக்க உள்ளது. குன்னுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 15ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. தேசிய தொழிற்பழகுனர் சான்று
அதில், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னணி நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர். பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் (என்.ஏ.சி.,) வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (என்.ஏ.சி.,) பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் என்.ஏ.சி., பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.தற்போது, தொழிற் பழகுனருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப, 7,700 முதல் 12,000 ரூபாய் வரை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 'என்.சி.வி.டி, எஸ்.சி.வி.டி., & சி.ஓ. இ' திட்டங்களின் கீழ் தொழிற் தேர்வில் தேர்ச்சி பெறலாம். இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாத அனைவரும் நேரடியாக உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயன் அடையலாம். மேலும், தகவலுக்கு, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின், 9499055709, 9499055707 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
14 hour(s) ago