உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சன்மார்க்க சபை முகாமில் 300 பேர் பங்கேற்பு

சன்மார்க்க சபை முகாமில் 300 பேர் பங்கேற்பு

அன்னுார் : அன்னுாரில் சமரச சுத்த சன்மார்க்க சபை சார்பில், கண், காது, மூக்குக்கான கலிக்கம் முகாம் நடந்தது.அன்னுார், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில், இலவச கண், காது, மூக்கு, கலிக்கம் முகாம் நேற்று முன்தினம் நடந்தது.முகாமை குலதெய்வ வழிபாட்டு மன்ற தலைவர் கார்த்தி துவக்கி வைத்தார். மன்றத்தின். கவுரவத் தலைவர் பழனிச்சாமி அன்னதானத்தை துவக்கி வைத்தார். சமரச சுத்த சன்மார்க்க சபை நிர்வாகிகள் பேசுகையில்,'அரிய வகை மூலிகை சாற்றில் தயாரிக்கப்படுவது கலிக்கம். இதை கண்களில் விடுவதன் வாயிலாக, கண் பார்வை தெளிவாகும். ஆரோக்கியம் மேம்படும்.இதே போல் மூக்குக்கு நசியம் விடுவதால் நல்ல பயன் ஏற்படும்,' என்றனர். முகாமில் 300க்கும் மேற்பட்டோருக்கு கலிக்கம் மற்றும் நசியம் மருந்து ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை